Tuesday, June 1, 2010

ஏன்டா இவனுக இப்படி ???

   என்னடா இவன்... ஏதாவது மொக்கை போடப்போறானா ??? என்று தலைப்பை பார்த்தவுடனேயே நினைக்குறீங்களா ??? பரவாயில்லை, தொடர்ந்து வாசியுங்க ...

   அண்மையில் பதிவாளர் (Blogger) நண்பர் ஒருவரை சந்தித்தேன் . கொஞ்சம் நெருங்கிய நண்பரும் கூட. அப்படியே வழமை போல எம் அரட்டை தொடங்கியது . நாட்டு நடப்புகள் அப்படி இப்படி என்று நகர்ந்த எங்கள் பேச்சு வலைப்பூக்கள், பேஸ்புக் (Facebook) போன்ற இணையம் சார்ந்த தலைப்புகளுக்குள் சென்றது. அப்படியே பேசிக்கொண்டிருந்த அவன் தன் ஆதங்கத்தை சொல்லத் தொடங்கினான். இதோ அவனின் வார்த்தைகளியே பதிகிறேன்...

"டேய், Blog லயும் சரி Facebook லயும் சரி , நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு சுயமா Post பண்ணினாலோ இல்ல Status Update பண்ணினாலோ எந்தப் பொடியனும் ஒரு Comment கூட போட மாட்டானுங்கடா, ஆனா இந்தப் பொண்ணுங்க போடுற மொக்கையான Status களுக்கெல்லாம் அள்ளி அள்ளி Comments குடுப்பானுங்கடா " என்று தன் உள்ளத்தில் உறைந்த ஆதங்கத்தை உளறிக் கொட்டினான்.
நானும் பதிலுக்கு கொஞ்சம் சீரியசாகவே "அது சரி, பொடியங்க தான் அப்படின்னா, இந்தப் பொண்ணுங்க உனக்கு போடுதுகளா?" எனக் கேட்டேன்.
அதுக்கு அவனும் "அத ஏண்டா கேக்குறாய், அவங்க அந்தப் பக்கமும் பார்க்க மாட்டாங்க "
என்று சலிப்புடன் சொல்லி விட்டு மௌனமாகிட்டான்.

   ஐயோ ..!!! இவன் இந்த மொக்கைய சொல்லவா இவ்வளவு அலட்டினான் என்று நீங்க என்னைப் பார்த்து சொல்லுறது விளங்குது .. என்ன செய்ய ...
அநேக புது முக பதிவாளர்களின் ஆதங்கமும் இது தானாம்...!!!



8 comments:

Shi-Live said...

Wowwwwwwwwwwwwwwwwwwwwww wus that unlucky fellow??
haaaaa

M. Azard (ADrockz) said...

தனியா சொல்றேன்டா. .. :D

அனு said...

என்னங்க பண்ணுறது.. நாட்டு நடப்பு அப்படி.. ஹாஹா..

(முதல்ல word verification-அ remove பண்ணுங்க.. இல்லன்னா, கமெண்ட் போடனும்னு நினைக்குறவங்க கூட போட மாட்டாங்க..)

M. Azard (ADrockz) said...
This comment has been removed by the author.
M. Azard (ADrockz) said...

சரியா சொன்னீங்க,
word verification சம்பந்தமான உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி :)
spam தொல்லைகளின் காரணத்தால் தான் active செய்துள்ளேன்

கவிதா said...

//அநேக புது முக பதிவாளர்களின் ஆதங்கமும் இது தானாம்...!!! //
ஓ... அப்பிடியா

M. Azard (ADrockz) said...

அப்படித் தான் :)

M. Azard (ADrockz) said...

word verification நீக்கப்பட்டுள்ளது