Thursday, May 27, 2010

அத்துமீறிய ஆசை..!!!

கானல் நீரைக் கண்டது 
கள்ள மனம் இங்கு கதறுது...
அருகே சென்றால் மாயம் என்று 
மறந்து போய் அது மயங்குது ...!

அத்து மீறிய கண்கள் இரண்டும்
அந்நிய பாதச் சுவடுகள் தொடருது ...
அழிந்த சுவடுகளின் சுவட்டைக் காண 
கூர்ந்து பார்த்து அது குனிகிறது ...!

எட்டாக் கனிக்கு எட்டி எட்டி 
எலும்பு முறிவுகள் கண்டது ...
வலியின் வழியில் வந்த ஆசை
எட்டச் சொல்லி மறுபடி அழைக்கிறது ...!

உப்பின் உவர்ப்பிற்கு உணர்வற்ற 
கடல் மீன் கொண்ட கண்கள் போல...
கண்ணீர் காயம் கண்ட கண்கள் 
கண்ணீரில் மிதக்க துடிக்குது ...!

நேற்று நடந்த பாதையில் நடந்தும் 
வளைவுகள் ஒன்றும் பழக்கமில்லை...
மோதி மோதி மறுத்த உடம்பில் 
மோதல் மீதொரு பயமும் இல்லை...!

துயரை துணையாய் ஏன் கொண்டாய் ???
உள்மனம் என்னை கேட்கிறது ...
மறுகணம் அதுவே அதிகாரமாய் 
பதிலாய் கேள்விகள் தொடுக்கிறது ...

மின்னொடும் ஒரு கம்பியில் 
மின்னதிர்வும் ஓர் வதையா ???

சில்லென சுழலும் சடப்பொருளும்
சேறு பட்டால் அழுதிடுமா ???

வானில் பறக்கும் ஒரு பறவை 
வெயிலின் வெப்பத்தில் வியர்த்திடுமா ???

உடைந்த இதயம் தொடர்ந்து துடிக்க 
காலில் குத்திய முள் வலித்திடுமா ???

கட்டான கேள்விகள் எடை கனக்க 
புத்தி மட்டும் கனியவில்லை ...
சளைக்காமல் விட்டது சட்டென ஒரு பதிலை 
"மௌனம்" எனும் ஒற்றை வார்த்தையில் ...!!!

"யாவும் கற்பனை"

என் முதல், பதிவு எட்டாத பொருள் மீது வற்றாத பற்று கொண்ட உள்ளங்களிற்கு ஒரு சமர்ப்பணம்...!!!




11 comments:

Nyschey said...

I am first who comment in your blogs :D :D :D

since I have commented about your this blog in your facebook note, I keep my silence :D

wish you all the best

M. Azard (ADrockz) said...

thanks a lot dude.. :)

பனித்துளி சங்கர் said...

கவிதை + காதல் +காதல்+ கவிதை அனைத்தும் அருமை

Unknown said...

கவிதை நல்ல இருக்கு.. வெவ்வேறு தளத்தில் உங்கள் பார்வை பயணிக்கிறது..
வித்தியாசமான கவிதை ..

மதுரை சரவணன் said...

//கட்டான கேள்விகள் எடை கனக்க
புத்தி மட்டும் கனியவில்லை ...
சளைக்காமல் விட்டது சட்டென ஒரு பதிலை
"மௌனம்" எனும் ஒற்றை வார்த்தையில் ...!!!//

வாழ்த்துக்கள்.கவிதை அருமை.

துரோகி said...

முதல் பதிவிலேயே முதிர்ச்சி தெரிகிறது...
கலக்குங்க!

M. Azard (ADrockz) said...

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...//
நன்றி தோழரே

//நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !//

spam தொல்லைகளுக்காக தான் அவ்வாறு செய்துள்ளேன், பரிசீலித்து நீக்குகிறேன், ஆலோசனைக்கு நன்றிகள்

//கே.ஆர்.பி.செந்தில் said...//
நன்றி தோழரே

மதுரை சரவணன் said...
நன்றி தோழரே

துரோகி said...
நன்றி தோழரே

M. Azard (ADrockz) said...

அன்புள்ளம் கொண்டு பாராட்டிய அனைத்து இனிய நெஞ்சங்களுக்கும் கோடி நன்றிகள்

M. Azard (ADrockz) said...

ஆலோசனைக்கு நன்றி, word verification நீக்கப்பட்டுள்ளது

Swengnr said...

அன்பு நண்பா - மொத்தம் 5 பதிவு! 2 கவிதை! நன்றாக தானே உள்ளது! எனக்கு பிடித்தது, வோட்டும் போட்டு விட்டேன்! வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்!

M. Azard (ADrockz) said...

@ software engineer; உங்கள் இந்த தாராள ஒத்துழைப்பே போதுமானது நண்பா... மிக்க நன்றி :)
உங்கள் ஒத்துழைப்பு தொடரட்டும்